மேலும் செய்திகள்
மொபைல் போன் பறித்தவர் கைது
17-Apr-2025
வெண்ணந்துார்:மது போதையில் பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்ட அண்ணனை அடித்துக்கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், வெண்ணந்துார் அருகே, மின்னக்கல் பஞ்., வடுகம்பாளையம் கீழ் தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம், 70; இவரது மனைவி சின்னம்மாள், 65; தம்பதியருக்கு மாணிக்கம், ஜெகநாதன், 49, ரங்கநாதன், 38, அர்ஜுனன், 35, என்ற நான்கு மகன்கள் உள்ளனர். இதில், மாணிக்கம், மனைவி விஜயலட்சுமியுடன் தனி வீட்டில் வசித்து வருகிறார்.கடந்த, 28 இரவு, மது குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்த ஜெகநாதன், தாய், தந்தையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.அப்போது, ரங்கநாதன், ஜெகநாதனிடம் தட்டிக்கேட்டபோது, இருவருக்கும் அடிதடி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஜெகநாதன், அங்கிருந்து கிளம்பி சென்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, அனந்தகவுண்டம்பாளையம் பகுதியில் ரத்த காயங்களுடன் ஒருவர் இறந்து கிடப்பதாக வெண்ணந்துார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். அதில், தம்பி ரங்கநாதன், அண்ணன் ஜெகநாதனை அடித்துக்கொன்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ரங்கநாதனை போலீசார் கைது செய்தனர். குடிபோதை தகராறில், அண்ணனை, தம்பி அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
17-Apr-2025