நாமக்கல்: 'போலீஸ் எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்க-ளுக்கு, உடற்தகுதி பயிற்சி வகுப்பு, மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், இன்று தொடங்குகி-றது' என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்-பட்டு வரும், தன்னார்வ பயிலும் வட்டம் மூலம், பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது.போலீஸ் எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்க-ளுக்கு, அடுத்த கட்டமாக நடக்கும் உடல் அளவீடு சோதனை மற்றும் உடல் திறன் சோதனை தேர்வில் வெற்றி பெற, உரிய வகையில் உடற்த-குதி பயிற்சி வகுப்பு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாக விளையாட்டு திடலில் துவங்குகிறது.இத்தேர்வுக்கான இலவச உடற்தகுதி பயிற்சி வகுப்பு, இன்று காலை, 6:30 முதல், 9:00 மணி வரையிலும், மாலை, 4:00 முதல், 6:30 மணி வரையிலும் நடக்கிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள், தங்களின் விபரங்களை, 04286--222260 என்ற தொலைபேசி மூலமோ அல்லது நேரிலோ தொடர்புகொண்டு பதிவு செய்து பயன் பெறலாம்.தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் நடந்த எழுத்து மற்றும் உடற்தகுதி இலவச பயிற்சி வகுப்பில் பயின்று, 2022 முதல், 2024 வரை, டி.என்.யு.எஸ்.ஆர்.பி., எஸ்.ஐ., தேர்வில், 17 பேர், டி.என்.யு.எஸ்.ஆர்.பி., பி.சி., தேர்வில், 54 பேர் பணி ஆணை பெற்று, தற்போது பணியில் உள்ளனர். மேலும், தற்போது வெளியிடப்பட்ட டி.என்.யு.எஸ்.ஆர்.பி., பி.சி., எழுத்து தேர்வில், நம் மாணவர்கள், 19 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் தெரி-விக்கப்பட்டுள்ளது.