உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 7 மாத குழந்தை சாவு போலீசார் விசாரணை

7 மாத குழந்தை சாவு போலீசார் விசாரணை

7 மாத குழந்தை சாவுபோலீசார் விசாரணைகுமாரபாளையம், ஜன. 1-கள்ளக்குறிச்சி மாவட்டம், வேங்கூர் பகுதியை சேர்ந்த பிரதாப், 25, ஜெயஸ்ரீ, 21, தம்பதியர். இவர்களது மகன் தவஷிக், 2; மகள் புவியரசி, 7 மாத பெண் குழந்தை. இவர்கள், குப்பாண்டபாளையம் பகுதியில் தங்கி, கரும்பு வெட்டும் வேலை செய்து வருகின்றனர். கடந்த, 29 காலை, 9:00 மணிக்கு குழந்தை புவியரசிக்கு திடீரென வாந்தி, பேதி ஏற்பட்டது. குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மறுநாள், அதேபோல் மீண்டும் வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. மீண்டும், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, குழந்தை இறந்தது. குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை