உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சமுதாயக்கூடம், நீர் தேக்க தொட்டி அமைக்க பூஜை

சமுதாயக்கூடம், நீர் தேக்க தொட்டி அமைக்க பூஜை

ப.வேலுார்:பரமத்தி அருகே, ஓவியம் பாளையம் கிராமத்தில் எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியிலிருந்து, 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம், 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.ப.வேலுார் எம்.எல்.ஏ., சேகர் தலைமை வகித்தார். பரமத்தி அ.தி.மு.க., ஒன்றிய செயலர் வெற்றி வேல், பரமத்தி நகர செயலர் சுகுமார் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்ட வர்த்தக அணி செயலர் தமிழ்மணி, பரமத்தி கவுன்சிலர்கள் சகுந்தலா, காந்திமதி, ராமன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்