மாரியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கும் விழா
மாரியம்மன் கோவிலில்பூக்குழி இறங்கும் விழாவெண்ணந்துார், நவ. 7-வெண்ணந்துார் யூனியன், ஆர்.புதுப்பாளையம் பஞ்., பகுதியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா, கடந்த, 22ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த, 24ல் கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, தினமும் அம்மனுக்கு அபிஷேகம் செய்து, பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 4- இரவு பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 1,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சக்தி அழைத்தல், பூக்குழி இறங்கும் விழா நடந்தது.தொடர்ந்து, ஊர் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில், திருத்தேர் பவனி நடந்தது. இன்று மாலை, எருதாட்டமும், அதனை தொடர்ந்து, 8ல் மஞ்சள் நீராடல் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.