உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தபால் நிலையம் மூடல்; தி.கோட்டில் மக்கள் தர்ணா

தபால் நிலையம் மூடல்; தி.கோட்டில் மக்கள் தர்ணா

திருச்செங்கோடு : திருச்செங்கோடு, நெசவாளர் காலனி பகுதியில், 40 ஆண்டுகளாக இயங்கி வந்த, 5,000க்கும் மேற்பட்ட கணக்காளர்கள், 3 கோடி ரூபாய் வைப்புத்தொகை, 3 கோடி ரூபாய் ரெக்கரிங் டிபாசிட் உள்ள தபால் நிலையத்தை முன்னறிவிப்பு இன்றி திடீரென மூடினர். இதை கண்டித்து, தங்கள் பகுதிக்கு அவசியம் தபால் நிலையம் வேண்டும் என வலியுறுத்தி, 5வது வார்டு நகராட்சி கவுன்சிலர் ராஜா தலைமையில், திருச்செங்கோடு தலைமை தபால் நிலைய அலுவலர் இந்திராவிடம், அப்பகுதி மக்கள் மனு கொடுக்க வந்தனர். மத்திய அரசின் முடிவு என்பதால் தான் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது எனக்கூறி, மனுவை பெற மறுத்தார். இதனால் பொதுமக்கள் தலைமை தபால் நிலையம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து வந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின் தலைமை தபால் அலுவலர் இந்திரா மனுவை பெற்றுக் கொண்டதோடு, கண்காணிப்பு அலுவலரிடமும் மனுவை கொடுக்க சொல்லி பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ