உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சட்டசபை தேர்தல் புறக்கணிப்பு பொத்தனுார் மக்கள் அறிவிப்பு

சட்டசபை தேர்தல் புறக்கணிப்பு பொத்தனுார் மக்கள் அறிவிப்பு

ப.வேலுார் :ப.வேலுார் அருகே பொத்தனுார் டவுன் பஞ்., 1வது வார்டில் வசிக்கும் மக்கள், சாக்கடை வசதி கேட்டு பல ஆண்டுகளாக போராடியும், நிர்வாகம் கண்டுகொள்ளாததால் வரும் சட்டசபை தேர்தலை புறக்கணிப்பதாக, அப்பகுதி மக்கள் அறிவித்தனர்.இது குறித்து அவர்கள் கூறியதாவது: கடந்த, 15 ஆண்டுகளாக இப்பகுதியில் உள்ள லட்சுமி நகரில், 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. வீட்டு வரி. சொத்து வரி. குடிநீர் வரி செலுத்தி வருகிறோம். ஆனால் இதுவரை எங்களுக்கு வடிகால் வசதி, கழிவுநீர் வெளியேற சாக்கடை வசதி செய்து தரப்படவில்லை.சாக்கடை இல்லாததால் கழிவுநீர் வீதிகளில் செல்கிறது. இது குறித்து டவுன் பஞ்., நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காததால், தற்போது அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகளே ஒன்று சேர்ந்து, சாக்கடை வசதியை நாங்களாகவே செய்து கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம். தற்போது அதற்கும் டவுன் பஞ்., நிர்வாகம் தடை போடுவதால், வரும் சட்டசபை தேர்தலை புறக்கணித்து, விரைவில் வீடுகளில் கறுப்பு கொடிகளை கட்டி போராடும் சூழ்நிலை ஏற்படும்.இவ்வாறு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி