மேலும் செய்திகள்
சித்தாபுதுார் பகுதியில் மின்கம்பங்கள் மாற்றம்
10-May-2025
சேந்தமங்கலம் :கொல்லிமலையில், சூறாவளி காற்றால் மின் வினியோகம் தடை பட்டிருந்த நிலையில், தற்போது, சீரமைக்கப்பட்டுள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.கொல்லிமலையில் கடந்த, 23ல் வீசிய சூறாவளி காற்றில் காரவள்ளி, நரியன்காடு பகுதி வழியாக சென்ற மின் கம்பங்களில், மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால், கொல்லிமலை முழுவதும் கடந்த நான்கு நாட்களாக மின் வினியோகம் தடை செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, நாமக்கல், சேந்தமங்கலம், காளப்பநாய்க்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்ற மின்வாரிய பணியாளர்கள் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல், கம்பங்களில் சாய்ந்திருந்த மரங்களை அப்புறப்படுத்தி, மின் கம்பிகளை சரி செய்தனர். இதனால், நேற்று கொல்லிமலையில் உள்ள பெரும்பாலான பகுதிகளுக்கு மின் வினியோகம் சீரானது. இதனால், மக்கள் நிம்மதி அடைந்தனர். இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,'கொல்லிமலையில் கடுமையான சூறாவளி காற்றில், பழமையான ஏராளமான மரங்கள் மின் கம்பங்களின் மீது விழுந்தது. இதை சரி செய்து, நேற்று முன்தினம் ஒத்தக்கடை பகுதியில் மின் வினியோகம் கொடுக்கப்பட்டது. நேற்று மீதமுள்ள பகுதியிலும், மின் வினியோகம் கொடுக்கப்பட்டுள்ளது. சூறாவளி காற்றில், 20 மின் கம்பங்கள் உடைந்துள்ளன. தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் பழுதடைந்த மின் கம்பங்களை சரி செய்யும் பணி நடக்கிறது,'' என்றனர்.
10-May-2025