உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆந்திராவில் பறவைக்காய்ச்சல் நாமக்கல் கோழிப்பண்ணைகளில் தடுப்பு நடவடிக்கை

ஆந்திராவில் பறவைக்காய்ச்சல் நாமக்கல் கோழிப்பண்ணைகளில் தடுப்பு நடவடிக்கை

நாமக்கல்: ஆந்திராவில் பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால், நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில், நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.ஆந்திரா மாநிலம், எலுரு, கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி, கிருஷ்ணா மாவட்டங்களில், பறவைக்காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த காய்ச்சலுக்கு, கடந்த, 45 நாட்களில், 5.4 லட்சம் கோழிகள் பலியாகியுள்ளன. இதையடுத்து, அங்கு, மூன்று மாதங்களுக்கு கோழி இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, நாமக்கல் மண்டலத்தில், 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்-ளன. இவற்றை பாதுகாக்க, கோழிகளுக்கு கிருமிநாசினி தெளித்தல், பயோ செக்யூரிட்டி முறைகளை கடைப்பிடித்தல் உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரு-கின்றனர்.கோழிப்பண்ணை வாசலில், 'பொட்டாசியம் பெர்மாங்கனேட்' கரைசல் கலந்த தண்ணீர் வைக்கப்பட்டு, வெளி ஆட்களும், வாக-னங்களும் அதன் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். வெளியில் இருந்து வரும் வாகனங்களை, கிருமிநாசினி தெளித்த பின்னரே பண்ணைக்குள் அனுமதிக்கின்றனர். நாமக்கல் பகு-தியில் நிலவும் தட்பவெப்பநிலை மற்றும் பண்ணைகளில் பின்-பற்றப்படும் பயோ செக்யூரிட்டி முறையால், பறவைக்காய்ச்சல் நோய் கிருமி பரவ வாய்ப்பு இல்லை. இருந்தாலும், நாமக்கல் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள கோழிப்பண்ணைகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது' என, கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.* தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் இருக்க, தமிழ்நாடு - ஆந்திர எல்லையான வேலுார் மாவட்டம், கிறிஸ்டியான்-பேட்டை, சைனாகுண்டா, பரதராமி ஆகிய, 3 சோதனைச்சா-வடி வழியாக ஆந்திராவிலிருந்து கோழிகள், முட்டைகள் ஏற்றி வரும் வாகனங்களை, வேலுார் மண்டல கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, கிருமி நாசினி தெளித்து, கோழிகளுக்கு பறவை காய்ச்சல் குறித்த சோதனை செய்த பின்னர், அனுமதிக்கின்றனர். வேலுார் மாவட்டத்திலுள்ள, 48 கால்நடை மருத்துவமனைகளில் பணியாற்றும், டாக்டர்களை கொண்டு, அந்தந்த பகுதிகளில் கோழிப்பண்ணைகளை சோதனை செய்து, கோழிகளுக்கு நோய் தாக்குதல் உள்ளதா என, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ