உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மதுவிலக்கு கொள்கை விழிப்புணர்வு பிரசாரம்

மதுவிலக்கு கொள்கை விழிப்புணர்வு பிரசாரம்

மதுவிலக்கு கொள்கைவிழிப்புணர்வு பிரசாரம்ப.வேலுார், நவ. 26-ப.வேலுார் பஸ் ஸ்டாண்டில், காந்திய காமராஜர் மக்கள் இயக்கம் சார்பில், தேசிய மதுவிலக்கு கொள்கையை ஏற்படுத்த வேண்டும் என, வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம், நேற்று நடந்தது. இதில், காந்திய காமராஜர் மக்கள் இயக்க மாநில செயலாளர் தமிழழகன், செயலாளர் இளையராஜா விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தனர்.அதில், தமிழகத்தில் புழக்கத்தில் உள்ள கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தொடர்பாக, தமிழக அரசின் புதிய மதுவிலக்கு சட்டம் மூலம் தடுக்க வழிவகை செய்ய வேண்டும். கள்ளச்சாராயம் புழக்கத்தில் உள்ள பகுதிகளில், மதுவிலக்கிற்கு எதிரான அமைப்பை உருவாக்குதல் வேண்டியும் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, பஸ் பயணிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !