மேலும் செய்திகள்
தொழிலாளி இறப்பில் சந்தேகம்; உறவினர்கள் முற்றுகை
17-Apr-2025
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, வெப்படையை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன், 50; விசைத்தறி வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி பிரேமா, 38; தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், கணவன், மனைவியிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம், மீண்டும் கணவன், மனைவியிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த கோகுலகிருஷ்ணன், மனைவி பிரேமாவை தாக்கியுள்ளார். இதுகுறித்து, பிரேமா அளித்த புகார்படி, வெப்படை போலீசார், கணவன் கோகுலகிருஷ்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
17-Apr-2025