மத்திய அரசு சட்டங்களின் நகல் எரிப்பு போராட்டம்
எருமப்பட்டி: எருமப்பட்டியில், மத்திய அரசின் நலச்சட்டங்-களை எதிர்த்து, நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. விதை மசோதா, தொழிலாளர் நலச்சட்டங்கள், மின்சார திருத்த சட்டங்களை, மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி, எருமப்பட்டியில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். பால் உற்பத்தியாளர்கள் சங்க ஒன்றிய செயலாளர் முன்னிலை வகித்தார். 20க்கும் மேற்-பட்ட கிராமங்களில் நடந்த போராட்டத்தில், ஏரா-ளமானோர் கலந்துகொண்டனர்.