மேலும் செய்திகள்
ஊரக வளர்ச்சித்துறை ஆர்ப்பாட்டம்
31-Oct-2025
எலச்சிபாளையம், எலச்சிபாளையம், 87.கவுண்டம்பாளையம் பஞ்.,ல், ஒன்பது வார்டுகளில், 10,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், கடந்த, மூன்றாண்டுகளாக சாக்கடை கால்வாயை முறையாக துார்வாராமல், கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, பி.டி.ஓ., அலுவலகத்திலும், கலெக்டரிடமும் பல்வேறு மனுக்கள் அளித்தும், இதுவரை நடவடிக்கை இல்லை.இதனால், நேற்று, மா.கம்யூ., ஒன்றியக்குழு உறுப்பினர் ஈஸ்வரன் தலைமையில், பஞ்., அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். எலச்சிபாளையம் துணை பி.டி.ஓ., பெரியசாமி, ஊராட்சி தனி அலுவலர் சந்திரசேகரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். வரும், 30க்குள் சரிசெய்து தருவதாக தெரிவித்ததை அடுத்து, ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
31-Oct-2025