நடவடிக்கை எடுக்காததால் போலீசாரை கண்டித்து மறியல்
சேந்தமங்கலம்: சேந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இக்கோவிலில், நேற்று முன்தினம் பூமிதி விழாவும், அலகு குத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு நாடகம் நடந்துள்ளது. அப்போது, அங்கு ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை தாக்கியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து பாதிக்கப்பட்ட தரப்பினர் புகார் தெரிவித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை எனக்கூறி, ஒரு தரப்பினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்னர். இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.