புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில், பட்டியலின மக்கள் கொடுக்கும் புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ் புலிகள் கட்சி சார்பில், கலெக்டர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் குழந்தைவேல் தலைமை வகித்தார். மாநில துணை பொதுச்செயலாளர் செல்வவில்லாளன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், பட்டியலின மக்கள், போலீஸ் ஸ்டேஷனில் கொடுக்கும் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்கொடுமை நிகழ்த்திய நபர்களை கைது செய்யாமல் அலட்சியம் காட்டும் போலீஸ்துறையின் செயல்பாட்டை கண்டிக்கிறோம். புதுச்சத்திரம் ஒன்றியத்தில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனையை தடுக்கக்கோரியும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கோஷம் எழுப்பினர். இதில், தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.