மேலும் செய்திகள்
பணி நிரந்தரம் கோரி தொடரும் உண்ணாவிரதம்
28-Jul-2025
நாமக்கல் துாய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, நாமக்கல்லில் சாமானிய மக்கள் நலக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் சாமானிய மக்கள் நலக்கட்சி, எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்கம், தமிழக மக்கள் நலக்கட்சி ஆகியவை சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட சுற்றுச்சூழல் அணி செயலாளர் பழனிசாமி தலைமை வகித்தார். அதில், தமிழகத்தில் கடந்த, 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சி அமைப்புகளில் ஒப்பந்த அடிப்படையில் துாய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறு துாய்மைப்பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்து, அரசு ஊழியர்ளாக பணியமர்த்திட வேண்டும். இட ஒதுக்கீட்டின்படி அனைத்து ஜாதியினருக்கும் துாய்மைப்பணியில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
28-Jul-2025