உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சாலை, குடிநீர் வசதி கேட்டு 2வது நாளாக ஆர்ப்பாட்டம்

சாலை, குடிநீர் வசதி கேட்டு 2வது நாளாக ஆர்ப்பாட்டம்

எருமப்பட்டி எருமப்பட்டி, பொன்னேரி கைகாட்டியில் இருந்து கோம்பைக்கு செல்லும் மண் சாலை உள்ளது. இந்த சாலையை அப்பகுதி விவசாயிகள், கொல்லிமலை அடிவார பகுதியில் குடியிருக்கும் மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், இந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு உள்ளதாகவும், இந்த சாலையை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தார்ச்சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. பின், சாலை அமைக்கும் பணி கைவிடப்பட்டது.இதனால், இப்பகுதியில் செல்லும் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இந்த சாலையை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும்; குடிநீர், மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் எனக்கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், பொன்னேரி கைகாட்டியில், நேற்று முன்தினம் நடந்தது. இதை தொடர்ந்து, நேற்றும் 2வது நாளாக இப்பகுதியில் சாலை அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடந்தது. இதில், 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சாலை, குடிநீர், மின் விளக்கு வசதி கேட்டு ஆர்ப்பாட்டம் செய்ததுடன், மரத்தடியில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை