உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாற்றுத்திறனாளி மாணவிக்கு- 3 சக்கர சைக்கிள் வழங்கல்

மாற்றுத்திறனாளி மாணவிக்கு- 3 சக்கர சைக்கிள் வழங்கல்

நாமக்கல்: ஜேடர்பாளையம், சரளை மேடு பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ரிதன்யா. இவர் மாவட்ட அரசு மாதிரி பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 1 படிக்கிறார். மேலும், விடுதிக்கும், பள்ளிக்கும் இடையே, 500 மீட்டர் தொலைவை தினமும் பயணிப்பது சிரமமாக இருந்த நிலையில், கலெக்டர் உமாவிடம் மூன்று சக்கர சைக்கிள் வழங்க கோரி மனு அளித்தார். பரிசீலனை செய்த கலெக்டர் உமா, மூன்று சக்கர சைக்கிள் வழங்க மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு உத்தரவிட்டார். அதன்படி, நேற்று மாற்றுத்திறனாளி மாணவி ரிதன்யாவுக்கு, 9,050- ரூபாய் மதிப்பில், மூன்று சக்கர சைக்கிளை கலெக்டர் உமா வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை