உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 1,187 மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கல்

1,187 மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கல்

குமாரபாளையம்: குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், இலவச சைக்கிள் வழங்கும் விழா, நேற்று நடந்தது. தலைமை ஆசிரியை காந்தரூபி தலைமை வகித்தார். ஈரோடு எம்.பி., பிரகாஷ், குமாரபாளையம் தொகுதிக்குட்பட்ட, பத்து அரசுப்பள்ளியை சேர்ந்த, 1,187 மாணவ, மாணவியருக்கு, இலவச சைக்கிள்களை வழங்கினார்.தொடர்ந்து அவர் பேசுகையில், ''நீட் தேர்வை நாங்கள் எதிர்க்க காரணம், தேர்வில் முறைகேடு, தமிழக மாணவர்களை புறக்கணிப்பு செய்து, வடமாநில மாணவர்களை தேர்வு செய்வது போன்ற செயல்களால் தான். படிப்பு தவிர விளையாட்டிலும் கவனம் செலுத்தி, அதிலும் பல சாதனைகள் புரிய வேண்டும். அதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறார்,'' என்றார்.மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் (பொ) விஜயன், மாவட்ட ஒருங்கிணைந்த திட்ட அலுவலர் பாஸ்கர், நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், தெற்கு நகர, தி.மு.க., பொறுப்பாளர் ஞானசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை