தாய்மார்களுக்கு பெட்டகம் வழங்கல்
தாய்மார்களுக்கு பெட்டகம் வழங்கல்நாமக்கல், நவ. 16-நாமக்கல் மாநகராட்சியில், 'ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்டத்தின், இரண்டாம் கட்டத்தில், எம்.பி., ராஜேஸ்குமார், தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார்.அரியலுார் மாவட்டம், வாரணவாசி குழந்தைகள் மையத்தில், 'ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்டத்தின், இரண்டாம் கட்டத்தை, 22 கோடி ரூபாயில், முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து, தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். இதில், 0--6 மாதமுள்ள, ஊட்டச்சத்து குறைபாடுள்ள, 76,705 குழந்தைகள் கண்டறியப்பட்டு, தாய்மார்களின் வீட்டுக்கே சென்று, ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட உள்ளது. அதன்படி, நாமக்கல் மாநகராட்சி, மலையாண்டி தெரு குழந்தைகள் மையத்தில் நடந்த நிகழ்ச்சியில், தாய்மார்களுக்கு நெய், பேரிச்சம்பழம், ஊட்டச்சத்து மாவு, இரும்புச்சத்து டானிக், பருத்தி துண்டு, பிளாஸ்டிக் பக்கெட் மற்றும் கப் ஆகிய பொருட்களை கொண்ட ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன. எம்.பி., ராஜேஸ்குமார், கலெக்டர் உமா, மேயர் கலாநிதி ஆகியோர் கலந்துகொண்டனர். நாமக்கல் மாவட்டத்தில், 2024-25ல், கடுமையான ஊட்டச்சத்து நிலையில் உள்ள, 1,874 குழந்தைகள், மிதமான ஊட்டச்சத்து நிலையில் உள்ள, 1,938 குழந்தைகள் என மொத்தம், 3,812 குழந்தைகளின் தாய்மார்களுக்கு, ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட உள்ளது.துணை மேயர் பூபதி, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, திட்ட அலுவலர் சசிகலா, மாவட்ட சமூக நல அலுவலர் காயத்திரி, உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.