கண்டிபுதுாரில் டாஸ்மாக் பார் அமைக்க பொது மக்கள் எதிர்ப்பு
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து, ஒட்டமெத்தை செல்லும் வழியில் கண்டிப்புதுார் பிரிவு வழித்தடம் உள்ளது. இப்பகுதியில் டாஸ்மாக், 'பார்' அமைக்கப்பட உள்ளது. இதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்பகுதி மக்கள் கூறியதாவது: கண்டிப்புதுார் பிரிவு சாலை பகுதியில் மதுபான பார் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த மதுபாருக்கு அனுமதி உள்ளதா, இல்லையா என, தெரியவில்லை. இங்கு மதுபார் அமைந்தால் மக்கள் பாதிக்கப்படுவர். குடியிருப்பு நிறைந்த பகுதி, பள்ளி மாணவர்கள் இந்த வழியில் தான் சென்று வருகின்றனர். எனவே, மதுபாரை அப்பகுதியில் அமைக்க கூடாது. இதற்கு மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.