மேலும் செய்திகள்
தமிழக அரசுக்கு இ.கம்யூ., நன்றி
13-Sep-2024
ராசிபுரம்: 'அனைவருக்கும் வீடு திட்டத்தில் தமிழக அரசின் பங்களிப்பு குறித்து அரசாணை வெளியிட வேண்டும்' என, தமிழக பா.ஜ., மத்திய அரசு நலத்திட்டப்பிரிவின் மாநில துணைத்தலைவர் லோகேந்திரன், தமிழக ஊராக வளர்சித்துறை ஆணையருக்கு மனு அனுப்பியுள்ளார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் அக்., 2ல் சிறப்பு கிராமசபை கூட்டம் நடக்கவுள்ளது. இந்த கூட்டத்தில், பிரதமர் அனைவருக்கும் வீடு திட்டத்தில் தமிழக அரசின் கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்காக எவ்வளவு தொகை வழங்குகிறது என்பதை அரசாணை வெளியிட வேண்டும். கிராமசபை கூட்டத்தில் பயனாளிகளை நேரடியாக இணைப்பதற்கு ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் ஆணை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13-Sep-2024