உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரேஷன் கடைகளின் செயல்பாடு கூட்டம்

ரேஷன் கடைகளின் செயல்பாடு கூட்டம்

நாமக்கல், நாமக்கல் மாவட்ட பொது வினியோக திட்ட, ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்து, மாதம் தோறும் ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த செப்., மாதத்திற்கான, நாமக்கல், மோகனுார், சேந்தமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட, ரேஷன் கடைகளின் செயல்படுகள் குறித்து ஆய்வு கூட்டம், நாமக்கல்லில் நடந்தது.நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு தலைமை வகித்தார். கூட்டத்தில், 'தாயுமானவர்' திட்டத்தின் செயல்பாடுகள், வரும் தீபாவளி பண்டிகையையொட்டி, பொது வினியோக திட்ட பொருட்களை முன்னதாக வழங்குவது குறித்து விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நாமக்கல் சரக துணைப்பதிவாளர் ஜேசுதாஸ், பொது வினியோக திட்ட கூட்டுறவு சார் பதிவாளர்கள் சிவகுமார், நிர்மலா, பிரேமலதா, நாமக்கல் கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குனர் சரவணன், விற்பனையாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ