உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஏரியில் மூழ்கி வாலிபர் பலி குடும்பத்திற்கு நிவாரணம்

ஏரியில் மூழ்கி வாலிபர் பலி குடும்பத்திற்கு நிவாரணம்

வெண்ணந்துார், ராசிபுரம், பொன்பரப்பிப்பட்டி கிராமம், பெருமாள் கோவில்காடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மகன் பழனிசாமி, 33; கடந்த மாதம், 26ல், திருச்செங்கோடு, கட்டிபாளையம் ஏரியில் மீன் பிடிக்க சென்றபோது நீரில் மூழ்கி இறந்தார். இவரது குடும்பத்தாருக்கு, முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, மூன்று லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.அதை தொடர்ந்து, நேற்று தொகுதி அமைச்சர் மதிவேந்தன், எம்.பி., ராஜேஸ்குமார் ஆகியோர், பொன்பரப்பிப்பட்டி கிராமத்திற்கு சென்று பழனிசாமியின் குடும்பத்தினரிடம், மூன்று லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினர். வெண்ணந்துார் ஒன்றிய ஆத்ம குழு தலைவர் துரைசாமி, தாசில்தார் சசிகுமார், ஆர்.ஐ., கார்த்திகேயன், வி.ஏ.ஓ., ராஜலட்சுமி உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ