மேலும் செய்திகள்
அண்ணன், தம்பிக்கு வலை
13-Jan-2025
எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் அருகே, சின்ன எலச்சிபாளையத்தில் முருகன் கோவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள புளியமரத்தில் விஷ வண்டுகள் கூடுகட்டி, பொதுமக்களை அச்சுறுத்தி வந்தன. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சத்துடனேயே இருந்தனர். இதுகுறித்து கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, நேற்று மாலை, 6:30 மணிக்கு திருச்செங்கோடு தீயணைப்பு வீரர்கள் அப்பகுதிக்கு சென்று, தீயணைப்பு வாகனம் மூலம் விஷ வண்டுகள் கட்டியிருந்த கூடுகளை அகற்றினர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.
13-Jan-2025