உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பயன்பாடு இல்லாத சோதனைச்சாவடி அகற்றம்

பயன்பாடு இல்லாத சோதனைச்சாவடி அகற்றம்

பள்ளிப்பாளையம்:வெப்படை பஸ் ஸ்டாப்பில், 8 மாதங்களாக பயன்பாடு இல்லாமல் காட்சி பொருளாக காணப்பட்ட, சோதனைச்சாவடி அகற்றப்பட்டுள்ளது. பள்ளிப்பாளையம் அருகே வெப்படை பஸ் ஸ்டாப் பகுதியில், கடந்த மார்ச் மாதம் தேர்தல் சமயத்தில் வாகன தணிக்கை செய்யவும், கண்காணிக்கவும் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டது. ஆனால் தேர்தல் சமயத்தில் கூட பயன்பாட்டுக்கு வராமல் பூட்டியே இருந்தது. இந்நிலையில், தேர்தல் முடிந்தும், பயன்பாடு இல்லாமல் தொடர்ந்து காட்சி பொருளாக காணப்பட்டது. மேலும் 8 மாதங்களாக, சோதனைச்சாவடியால் பயணிகளுக்கு இடையூறாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் சில நாட்களுக்கு முன்பு, சோதனைச்சாவடி அகற்றப்பட்டது. இது குறித்து வெப்படை போலீசார் கூறுகையில்,'வெப்படை பஸ் ஸ்டாப் பகுதியில் இருந்த சோதனைச்சாவடியை எடுத்து, பச்சாம்பாளையம் பைபாஸ் சாலையில் வைக்கப்பட்டுள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை