சாலையோர அபாய கிணறு தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை
வெண்ணந்துார், டிச. 21-வெண்ணந்துார் அடுத்த தச்சங்காடு பகுதியில் இருந்து கோம்பைக்காடு செல்லும் பகுதியில் சாலையோர கிணறு உள்ளது. இச்சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையோரத்தில், கிணறு உள்ள பகுதியில் தடுப்பு சுவர் இல்லாமல், திறந்தவெளியாக உள்ளதால், விபத்து ஏற்படுவதற்கு அதிகளவு வாய்ப்புள்ளது. கிணறு உள்ள இடத்தின் அருகே, வளைவு பகுதி உள்ளது. பகல் நேரத்தில் வரும் போது, கிணறு தெரியும். இரவு நேரங்களில் வரும்போது, மிகவும் எச்சரிக்கையுடன் வரவேண்டும். இல்லையெனில், எதிர்பாராத விதமாக, விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, 'கிணறு உள்ள பகுதியில், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி, தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன் வர வேண்டும்.