உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டுகோள்

பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டுகோள்

நாமக்கல்: 'நாமக்கல் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட, 9 ஊராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்' என, கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.நாமக்கல் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில், கவுன்சில் கூட்டம் மேயர் கலாநிதி தலைமையில், நேற்று நடந்தது. துணை மேயர் பூபதி, கமிஷனர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்-தனர்.இதில், நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்துக்குள் புகுந்து அலுவ-லர்களிடம் தகராறில் ஈடுபட்டோர் மீது எடுக்கப்பட்ட நடவ-டிக்கை குறித்து, 11வது வார்டு கவுன்சிலர் சரவணன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கமிஷனர், ''துப்புரவு ஆய்-வாளர் செல்வகுமார் அளித்த புகார்படி, 4 பேர் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் பணி-யாற்றும், 2 துாய்மை பணியாளர்களை பணி நீக்கம் செய்யுமாறு சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்திடம் கடிதம் வழங்கப்பட்டுள்-ளது,'' என்றார்.கவுன்சிலர் ஈஸ்வரன் பேசுகையில், ''நாமக்கல் நகராட்சியுடன் சில ஆண்டுகளுக்கு முன் இணைக்கப்பட்ட, 9 ஊராட்சிகளுக்-கான பாதாள சாக்கடை திட்டப்பணி முடிவடையாமல் பல மாதங் களாக நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்-திற்குள்ளாகி வருகின்றனர்,'' என்றார். தொடர்ந்து, கவுன்சிலர்கள் தங்களுடைய வார்டுகளில் உள்ள பிரச்னைகளை எடுத்துரைத்-தனர். அதன்பின், அனைத்து கவுன்சிலர்களின் ஒப்புதலுடன், 219 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி