மேலும் செய்திகள்
வெள்ளப்பெருக்கால் சீறிப்பாயும் தண்ணீர்
31-Jul-2025
பள்ளிப்பாளையம்: 'காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கால், புது தண்ணீர் வருவது அதிகரித்துள்ளதால், பொது-மக்கள், தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும்' என, பள்ளிப்பாளையம் அரசு மருத்துவர் வேண்-டுகோள் விடுத்துள்ளார்.பள்ளிப்பாளையம் ஆற்றுப்பகுதியிலிருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரிக்கப்பட்டு, பள்ளிப்பா-ளையம் நகரம், ஒன்றியம், படவீடு, ஆலாம்பா-ளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட மாவட்-டத்தின் பல பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்-பட்டு வருகிறது.கடந்த ஒரு வாரமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், செந்நிறத்தில் புது தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.இது குறித்து பள்ளிப்பாளையம் அரசு மருத்துவர் வீரமணி கூறுகையில்,''தற்போது ஆற்றில் அதிக-ளவு புது தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, ஆற வைத்து குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்தால் உடல் பிரச்ச-னைகள் பாதி குறைந்துவிடும். மழை காலம் என்பதால், மழை நீர் தேங்காதவாறு வீட்டை சுற்-றிலும் துாய்மை வைத்திருக்க வேண்டும். இதனால் கொசு மூலம் பரவும் நோய்களை தடுக்-கலாம்,'' என்றார்.
31-Jul-2025