உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சரபங்கா நீரேற்று திட்டத்தை விரிவுபடுத்தி குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கோரிக்கை

சரபங்கா நீரேற்று திட்டத்தை விரிவுபடுத்தி குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கோரிக்கை

நாமக்கல், டிச. 2-'சரபங்கா நீரேற்று திட்டத்தை விரிவுபடுத்தி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் விவசாயம், குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மாவட்ட காங்., விவசாய அணி தலைவர் மெய்ஞானமூர்த்தி, நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மேட்டூர் அணை நிரம்பி வெளியேற்றப்படும் உபரி நீரை கிழக்கு வாய்க்கால், சரபங்கா நதி, திருமணிமுத்தாறு, பொன்னியாறு, கரைபோட்டனார் மற்றும் அய்யார் ஆகியவற்றுடன் இணைப்பதன் மூலம், 100 ஏரிகள் நிரம்பிவிடும். 132 கி.மீ., நீளம், 565 கோடி ரூபாய் மதிப்பில், சரபங்கா நீரேற்று திட்டம் (தொம்மம்பட்டி நீரேற்றில் இருந்து)மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தை விரிவுபடுத்தி, சேலத்தில் இருந்து, 6 கி.மீ., துாரத்தில் உள்ள, 2,400 ஏக்கர் பரப்பளவில் உள்ள மிகப்பெரிய ஏரியான பனைமரத்துப்பட்டி ஏரியில் நீரை நிரப்ப வேண்டும்.அதன் மூலம், பனைமரத்துப்பட்டி ஏரியில் இருந்து சேலம், வாழப்பாடி, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல் தாலுகாவில் உள்ள அனைத்து ஏரி, குளங்களை நிரப்புவதன் மூலம், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நீர் ஆதாரங்கள் வலுவடைந்து, நிலத்தடி நீர்மட்டம் செறிவூட்டப்பட்டு விவசாயம், குடிநீர் மற்றும் இதர தொழில் துறை தேவைகள் பூர்த்தி அடையும்.எங்களது நீண்டகால கோரிக்கையை அரசுக்கு பரிந்துரை செய்து, தேவையான நிதியை ஒதுக்கி திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை