மேலும் செய்திகள்
பிரதிமாதம் 5ம் தேதிக்குள் ஓய்வூதியம் வழங்கணும்!
24-Jan-2025
நாமக்கல்: 'தற்போது பெற்று வரும் கருணை தொகை ஓய்வூதியத்தை தமி-ழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும்' என, மாநில செயற்கு-ழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. மாநில தலைவர் செல்லமுத்து தலைமை வகித்தார். பொருளாளர் கலியபெருமாள் வரவேற்றார். கவுர பொதுச்செயலாளர் குப்புசாமி முன்னிலை வகித்தார். பொதுச்செ-யலாளர் முத்துபாண்டியன், சங்க செயல்பாடுகள் குறித்து பேசினார்.கூட்டத்தில், தற்போது பெற்று வரும் கருணை தொகை ஓய்வூதி-யத்தை தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும். நிறுத்தி வைக்-கப்பட்டுள்ள ஓய்வு கால நிதிப்பயன்களை வழங்க வேண்டும். 2021 பிப்., 22க்கு பின் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பணியா-ளர்களுக்கு, மற்ற பணியாளர்களுக்கு வழங்குவது போல் கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
24-Jan-2025