உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பாலத்தில் மின்விளக்குகள் அமைக்க வேண்டுகோள்

பாலத்தில் மின்விளக்குகள் அமைக்க வேண்டுகோள்

மல்லசமுத்திரம், மாரம்பாளையம், திருமணிமுத்தாறு பாலத்தில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும்.மல்லசமுத்திரம் யூனியன், மாரம்பாளையம் திருமணிமுத்தாறு பாலம் வழியாக, தினமும் எண்ணற்ற பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் பெண்கள், பொதுமக்கள் சென்று வருகின்றனர். இதுவரை பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. மேலும் பாம்பு, பூரான் போன்ற விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.பெண்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. அமாவாசை உள்ளிட்ட தினங்களில் கும்மிருட்டு நிலவுவதால், திருடர்களால் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்திலும் சென்று வருகின்றனர். எனவே, பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !