மேலும் செய்திகள்
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலம்
20-Dec-2025
போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு
20-Dec-2025
இயற்கை உரம் தயாரிப்பு மாணவர்கள் செயல்விளக்கம்
20-Dec-2025
நுாலகம் திறப்பு விழா
20-Dec-2025
கந்தசாமி கோவிலில் அமாவாசை வழிபாடு
20-Dec-2025
பள்ளிப்பாளையம் : பள்ளிப்பாளையம் பகுதி காவிரி ஆற்றில் சாயக்கழிவுநீர் கலப்பதால், குடிநீரின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.பள்ளிப்பாளையம் பகுதி காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரிக்கப்பட்டு, மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த ஆற்றில் சாயக்கழிவுநீர் அதிகளவு கலப்பதால், மக்களுக்கு வழங்கும் குடிநீர் சுத்திகரித்து வழங்கினாலும், பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது.இதுகுறித்து, கடந்த, 16ல் நடந்த பள்ளிப்பாளையம் நகர்மன்ற கூட்டத்தில், அ.தி.மு.க., கவுன்சிலர் சரவணன், சாயக்கழிவு நீரால் குடிநீர் பாதிக்கப்படுகிறது. இந்த குடிநீர் குடிக்கும் மக்களுக்கு புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. இந்த குடிநீரை பரிசோதனை செய்ய வேண்டும் என, புகார் தெரிவித்துள்ளார்.எனவே, மாவட்ட நிர்வாகம் அலட்சியம் செய்யாமல், குடிநீரை பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20-Dec-2025
20-Dec-2025
20-Dec-2025
20-Dec-2025
20-Dec-2025