உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மழையால் நெற்பயிர்கள் செழிப்பு

மழையால் நெற்பயிர்கள் செழிப்பு

பள்ளிப்பாளையம், மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில், கடந்த ஜூலை, 1 முதல் பாசனத்திற்கு தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீரை பயன்படுத்தி, பள்ளிப்பாளையம் பகுதிக்குட்பட்ட மோளகவுண்டம்பாளையம், எளையாம்பாளையம், எலந்தகுட்டை, சமயசங்கிலி, தெற்குபாளையம், ஆலாம்பாளையம், புதுப்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில், 10,000 ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். வாய்க்காலில் வரும் தண்ணீரை பயன்படுத்தி, பள்ளிப்பாளையம் வட்டார விவசாயிகள் நெல்சாகுபடி துவக்கியுள்ளனர். வாய்க்காலில் தண்ணீர் டிச., வரை வரும்.இந்நிலையில், கடந்த, 20 நாட்களுக்கு முன் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் நெற் பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்து பச்சை பசேலென காட்சியளிக்கிறது. வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் வருகை மற்றும் தொடர் மழையால், நெல்சாகுபடிக்கு போதுமான தண்ணீர் கிடைத்துள்ளது. இதனால், இந்தாண்டு எதிர்பார்த்தளவு நெல் சாகுபடியில் லாபம் கிடைக்கும் என, விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை