உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.13.48 லட்சத்தில் சாலை பணிக்கு பூஜை

ரூ.13.48 லட்சத்தில் சாலை பணிக்கு பூஜை

மோகனுார், மோகனுார் தாலுகா, பரளி பஞ்.,ல் குண்டும், குழியுமாக மண் சாலை காணப்பட்டது. அவற்றை கப்பி சாலையாக மாற்றி பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என, அப்பகுதி மக்கள கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், கப்பி சாலை அமைக்க, 13.48 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, கீழ் பரளி பழனியப்பன் தோட்டம் முதல், தொட்டிப்பட்டியார் தோட்டம் வரை, அரை கி.மீ., துாரத்திற்கு இந்த காப்பி சாலை அமைக்கப்படுகிறது.இப்பணியை, நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், நேற்று பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். பி.டி.ஓ., இளங்கோ, கொ.ம.தே.க., ஒருங்கிணைந்த விவசாய அணி நாமக்கல் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் சசிகுமார், அவைத்தலைவர் பழனிமலை, மகளிரணி நிர்வாகிகள் பரமேஸ்வரி, சுதா, ஒன்றிய செயலாளர் குப்புசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ