உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.18.55 கோடியில் சாலை பணிக்கு பூஜை

ரூ.18.55 கோடியில் சாலை பணிக்கு பூஜை

திருச்செங்கோடு, திருச்செங்கோடு யூனியன், தோக்கவாடி முதல் தேவனாங்குறிச்சி, வெப்படை ரோடு இணைப்பு சாலை அகலப்படுத்துதல் மற்றும் 3 சிறு பாலங்கள் அமைக்கும் பணி என, 2.85 கோடி ரூபாய் மதிப்பிலும்; மோர்பாளையம் முதல் காங்கேயம்பாளையம் வரை சாலை மேம்படுத்துதல் மற்றும் மூன்று சிறுபாலங்கள் அமைக்கும் பணி, 3.20 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், ராமாபுரம் முதல் வையப்பமலை வரை, 3.8 கி.மீ., நீள சாலை, 3.95 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்; ராமாபுரம் சாலை சந்திப்பில் இருந்து எலச்சிபாளையம் சந்திப்பு வரை, சாலை மேம்படுத்துதல் பணி சிறு பாலம் கட்டும் பணி, 1.68 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் என, ஏழு சாலை பணிகள், மொத்தம், 18.55 கோடி ரூபாய் மதிப்பில், திருச்செங்கோடு எம்.எல்.ஏ.,-கொ.ம.தே.க., ஈஸ்வரன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை