உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.5 லட்சம் லஞ்சம்; ரூ.10 ஆயிரம் அட்வான்ஸ்! பணத்துடன் சிக்கினார் கெங்கவல்லி தாசில்தார்

ரூ.5 லட்சம் லஞ்சம்; ரூ.10 ஆயிரம் அட்வான்ஸ்! பணத்துடன் சிக்கினார் கெங்கவல்லி தாசில்தார்

கெங்கவல்லி: ஓடை ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு, 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு, தை அமாவாசை நாளில், 10,000 ரூபாய் அட்வான்ஸ் வாங்கிய, கெங்கவல்லி தாசில்தாரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, செல்வம் நகரை சேர்ந்தவர் மஞ்-சுளா, 47. இவரது விவசாய தோட்டம் அருகே, நீரோடை ஆக்கிர-மிப்பை அகற்றக்கோரி, கெங்கவல்லி தாலுகா, சேலம் கலெக்டர் அலுவலகத்தில், அவர், பலமுறை மனு அளித்தும் பலனில்லை. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிமன்றம், கடந்த செப்., 18ல், ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டது. இதனால் உரிய நடவடிக்கை எடுக்கும்படி, கெங்கவல்லி தாசில்தார் பாலகிருஷ்ணனிடம், மஞ்சுளா தெரிவித்தார். அதற்கு, '5 லட்சம் ரூபாய் தர வேண்டும். தை அமாவாசையன்று, முன்-பணம் வேண்டும்' என தாசில்தார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மஞ்சுளா, சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். அவர்கள் அறிவுரைப்படி, தை அமாவாசையான நேற்று மதியம், 3:00 மணிக்கு, கெங்கவல்லி தாலுகா அலுவலகத்துக்கு, மஞ்சுளா வந்தார். டி.எஸ்.பி., சுபாஷினி தலைமையில் போலீசார் மறைந்தி-ருந்தனர். மஞ்சுளாவிடம் இருந்து, 10,000 ரூபாயை அட்வான்-ஸாக வாங்கி, தாசில்தார் பாலகிருஷ்ணனை போலீசார் சுற்றி வளைத்தனர். அவரை கைது செய்து, 10,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் புகார் தொடர்பான ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.பாலகிருஷ்ணன், சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே, தியாக-னுாரை சேர்ந்தவர். இவரது மனைவி உஷாராணி, வி.ஏ.ஓ.,வாக உள்ளார். பாலகிருஷ்ணன் லஞ்சம் வாங்கி கைதானதால் தியாக-னுாரில் உள்ள அவரது வீடு மற்றும் தாலுகா அலுவலகத்தில், இரவு, 10:00 மணிக்கு மேலும், தொடர்ந்து சோதனை நடந்தது. நீரோடை ஆக்கிரமிப்பு தொடர்பான ஆவணங்களை, பறிமுதல் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை