உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கேரி பேக்குகள் பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.7,000 அபராதம்

கேரி பேக்குகள் பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.7,000 அபராதம்

கேரி பேக்குகள் பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.7,000 அபராதம்ராசிபுரம், நவ. 8-நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்தில், கேரி பேக்குகளை பயன்படுத்திய கடைகளுக்கு, 7,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்., பகுதியில் ஆத்துார் பிரதான சாலை, கடைவீதி, புதுப்பட்டி ரோடு, அரியாகவுண்டம்பட்டி ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள மருந்து கடைகள், மார்க்கெட் பகுதிகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர், ஜவுளி கடைகளில் நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் ஆறுமுகம் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கேரி பேக்குகள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா என சோதனை மேற்கொண்டனர். இதில், 20க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை செய்ததில், 69 கிலோ கேரி பேக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பயன்படுத்திய கடைகளுக்கு, 7,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. துப்புரவு மேற்பார்வையாளர் லோகநாதன், துப்புரவு ஆய்வாளர் காளியப்பன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ