உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் எம்.பி., வீட்டில் தீ விபத்து பெட்ரோல் குண்டு வீசியதாக வதந்தி

நாமக்கல் எம்.பி., வீட்டில் தீ விபத்து பெட்ரோல் குண்டு வீசியதாக வதந்தி

நாமக்கல்:கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தொகுதி எம்.பி., மாதேஸ்வரன் வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அங்கு பெட்ரோல் குண்டு வீசியதாக வதந்தி பரவியதால் பரபரப்பு நிலவியது.நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த பொட்டணம் கிராமத்தில், நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரனுக்கு சொந்தமான வீட்டில், அவரது தாய் வரதம்மாள், 80, வசிக்கிறார். நேற்று அதிகாலை 1:30 மணிக்கு வீட்டில் உள்ள ஏசி.,யில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. வரதம்மாள் வீட்டை விட்டு வெளியே வந்து கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் செல்ல முற்பட்டனர். அதற்குள் வீட்டில் இருந்த ஏசி, மெத்தை, டேபிள், சேர், பேன், சுவிட்ச் பாக்ஸ் தீயில் எரிந்தன. வீட்டில் இருந்த, 70,000 ரூபாயும் எரிந்தது. நாமக்கல் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர்.இதற்கிடையே, எம்.பி., வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதால், வீட்டில் உள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக நேற்று மதியம் தகவல்கள் பரவின. கூடுதல் எஸ்.பி., ஆகாஷ் ஜோஷி, இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் விசாரித்தனர்.நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் அறிக்கையில், 'ஏசி.,யில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்துள்ளது. யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தனியார் 'டிவி'யில் எம்.பி., வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக செய்தி ஒளிபரப்பப்பட்டது. இந்த செய்தி புரளியானது. இதுபோல் வதந்தி மற்றும் பொய் செய்திகளை வெளியிடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை