உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.3.73 லட்சத்துக்கு தே.பருப்பு விற்பனை

ரூ.3.73 லட்சத்துக்கு தே.பருப்பு விற்பனை

திருச்செங்கோடு, திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில், இளையாம்பாளையம், ஏமப்பள்ளி, சங்ககிரி, பரமத்தி வேலுார், வால்நாயக்கன்பாளையம், குமாரபாளையம், ஜேடர்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள், 52 மூட்டை தேங்காய் பருப்பை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.இதில், முதல் தரம் கிலோ, 181 ரூபாய் முதல், 211.70 ரூபாய், இரண்டாம் தரம், 149 முதல், 176.70 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம், 52 மூட்டைகள், மூன்று லட்சத்து, 73,000 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை