உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆய்வுக்கு வராத பள்ளி வாகனங்கள் மாணவர்களை அழைத்து செல்ல தடை

ஆய்வுக்கு வராத பள்ளி வாகனங்கள் மாணவர்களை அழைத்து செல்ல தடை

ராசிபுரம் : ஒவ்வொரு கல்வியாண்டும் பள்ளி தொடங்குவதற்கு முன், வருவாய்த்துறை, பள்ளிக்கல்வித்துறை, காவல் துறை, போக்குவரத்து துறை ஆகிய துறைகளின் அலுவலர்கள் முன், அனைத்து பள்ளி வாகனங்களும் தகுதியான நிலையில் உள்ளதா என, ஆய்வு செய்ய வேண்டும். இதையொட்டி, ராசிபுரம் பகுதியில் உள்ள, 30 தனியார் பள்ளி வாகனங்கள், கடந்த, 16ல் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வில், டி.ஆர்.ஓ., பார்த்திபன் தலைமை வகித்தார்.டி.எஸ்.பி., விஜயகுமார், டி.இ.ஓ., மரகதம், தாசில்தார் சரவணன், தீயணைப்புத்துறை அலுவலர் பலகாரசாமி, ஆர்.டி.ஓ., முருகேசன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நித்யா ஆகியோர் கலந்து கொண்டனர். 30 பள்ளிகளில் இருந்து, 272 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 8 வாகனங்கள் ஆய்வுக்கு வரவில்லை.ஆய்வுக்கு வராத வாகனங்கள் பள்ளி திறப்பதற்கு முன், ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குள் ஆய்வுக்கு உட்பட்டு தகுதி சான்று பெறவில்லை என்றால், மாணவர்களை அழைத்துச்செல்ல பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை