உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.50 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனை

ரூ.50 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனை

நாமகிரிப்பேட்டை : நாமகிரிப்பேட்டையில், கூட்டுறவு அமைப்பான ஆர்.சி.எம்.எஸ்., மற்றும் 15க்கும் மேற்பட்ட தனியார் மண்டிகள் மூலம், வாரந்தோறும் செவ்வாய்கிழமை மஞ்சள் விற்பனை நடந்து வருகிறது. நேற்று, 540 மூட்டைகள் ஏலத்திற்கு கொண்டுவரப்பட்டன. மொத்தம், 50 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.விரலி ரகம், 100 கிலோ மூட்டை குறைந்தபட்சம், 9,399 ரூபாய், அதிகபட்சம், 19,419 ரூபாய்; உருண்டை ரகம் குறைந்தபட்சம், 9,419 ரூபாய், அதிகபட்சம், 16,092 ரூபாய், பனங்காலி ரகம் குறைந்தபட்சம், 6,689 ரூபாய், அதிகபட்சம், 23,299 ரூபாய் என, 50 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. விரலி, 350, உருண்டை, 150, பனங்காலி, 50 என, மொத்தம், 550 மூட்டை மஞ்சள் வரத்தாகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ