நாமக்கல் அரசு கலை கல்லுாரியில் வேலைவாய்ப்பு குறித்த கருத்தரங்கு
மோகனுார், நாமக்கல், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில் வேலைவாய்ப்பு குறித்த கருத்தரங்கு நடந்தது.கல்லுாரி முதல்வர் ராஜேஸ்வரி (பொ) தலைமை வகித்து பேசுகையில், ''இன்றைய சூழ்நிலையில் அனைவரும் வேலை பெறுவது என்பது எளிதானதல்ல. வேலைவாய்ப்பை எதிர்பார்க்காமல், சுய தொழில் தொடங்குவதன் மூலம், மாணவர்கள் வேலை வாய்ப்பை உருவாக்க முடியும். இதனை ஊக்குவிக்கும் வகையில், அரசு பல திட்டங்களை அறிவித்துள்ளது. குறிப்பாக கடன் வசதி, மானியம், தொழில் பயிற்சி ஆகியவை உள்ளது,'' என்றார்.மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா, 'வேலைவாய்ப்பின் இன்றைய நிலை மற்றும் சுய வேலைவாய்ப்பின் முக்கியத்துவம்' குறித்து எடுத்துரைத்தார்.இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன முதன்மை பயிற்சியாளர் கண்ணன், சுய வேலைவாய்ப்பை எவ்வாறு தேர்ந்தெடுப்பது, அதற்கான பயிற்சி வகுப்பு, கடன் பெறும் வழிமுறைகள் குறித்து பேசினார். கல்லுாரி மாணவ, மாணவியர், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.