சேந்தமங்கலம் டவுன் பஞ்.,ல்ரூ.6 கோடியில் குடிநீர் பணி
சேந்தமங்கலம்;சேந்தமங்கலம் டவுன் பஞ்.,க்கு, கலைஞர் நகர் மேம்பாட்டு திட்டத்திலிருந்து, கொல்லிமலை அடிவாரம், காரவள்ளி பெரியாற்றில் இருந்து, பேரூராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு, ஆறு கோடி ரூபாயில் புதிய பைப் லைன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா, நேற்று நடந்தது. வட்டார அட்மா குழு தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் பொன்னுசாமி எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.முன்னதாக பேரூராட்சி தலைவர் சித்ரா தனபாலன் வரவேற்று பேசினர். நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார், எம்.பி., திட்ட பணியை தொடங்கி வைத்தார். அட்மா குழு துணை தலைவர் தனபாலன், பேரூராட்சி செயல் அலுவலர் வனிதா, துணை தலைவர் ரகு ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.