உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்

சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்

ப.வேலுார்;ப.வேலுாரில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம், நேற்று நடந்தது. இதில், சுல்தான்பேட்டையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கும், குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலவேம்பு குடிநீர், உப்பு சர்க்கரை கரைசல் வழங்கப்பட்டது.ப.வேலுார் டவுன் பஞ்., தலைவர் லட்சுமி, வட்டார மருத்துவர் மேகலா, சுகாதார மேற்பார்வையாளர் மணிவண்ணன், சுகாதார ஆய்வாளர் தினேஷ், நடமாடும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர். மேலும், அப்பகுதியில் கொசு மருந்து அடிக்கப்பட்டது. ஆட்டுக்கல், டயர், பிளாஸ்டிக் கப்புகள், பூந்தொட்டி, தேங்காய் ஓடுகளில் தேங்கியிருந்த தண்ணீரை, டவுன் பஞ்., துாய்மை பணியாளர்கள் அகற்றினர். டவுன் பஞ்., தலைவர் லட்சுமி, டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு நோட்டீசை மக்களுக்கு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை