மேலும் செய்திகள்
40 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
13-Nov-2024
நாமகிரிப்பேட்டை, நவ. 17-நாமகிரிப்பேட்டை ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், உடையார்பாளையம் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. சி.இ.ஓ., மகேஸ்வரி தலைமை வகித்தார். உதவி திட்ட அலுவலர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோமதி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில், 83 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இவர்களில், 10க்கும் மேற்பட்டோருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. 4 பேரின் தேசிய அடையாள அட்டை புதுப்பிக்கப்பட்டது. 7 மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள், 10க்கும் மேற்பட்டோருக்கு பஸ் பாஸ் வழங்கப்பட்டது.அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ரவிசெல்வம், வட்டார வளமைய மேற்பார்வையாளர் செண்பக வடிவு, இயன்முறை மருத்துவர் சுஷ்மிதா, ஆசிரியர் பயிற்றுனர்கள் சென்றாய பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
13-Nov-2024