மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
17-Nov-2024
நாமக்கல், நவ. 24-நாமக்கல் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், 2024-25ம் ஆண்டிற்கு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் பயிலும், 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு, சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, கொல்லிமலை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், சிறப்பு முகாம் நேற்று நடந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜானகி, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வரதராஜன், வட்டார கல்வி அலுவலர் பழனிச்சாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.ஆசிரியர் பயிற்றுனர் ரமேஷ்குமார் வரவேற்றார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் மணிமேகலை, தாசில்தார் மனோகரன் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர். வட்டாரத்தில் உள்ள, 77 பேர் பங்கேற்றனர்.அவர்களுக்கு, காது, மூக்கு, தொண்டை, எலும்பு, குழந்தைகள் நலம், கண் உள்ளிட்ட நோய்களுக்கு அந்தந்த மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். தொடர்ந்து, தேசிய அடையாள அட்டை, உபகரணம் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனர். 3 பேருக்கு தேசிய அடையாள அட்டை, 2 பேருக்கு புதுப்பிக்கப்பட்டது. அதேபோல், உபகரணத்திற்கு, 8 பேர், பஸ் பாஸ்சிற்கு, 4 பேர், ரயில் பாசிற்கு, 2 பேர், இயன்முறை மருத்துவ பயிற்சிக்கு, 4 பேர் என, மொத்தம், 18 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், சிறப்பு பயிற்றுனர் ரத்தினம், ஆசிரியர் பயிற்றுனர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். வரும், 26ல், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடக்கிறது.
17-Nov-2024