உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / செல்வலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

செல்வலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

செல்வலிங்கேஸ்வரர்கோவிலில் சிறப்பு பூஜைமல்லசமுத்திரம், டிச. 1-மல்லசமுத்திரம் அருகே, அக்கரைப்பட்டி வாய்க்கால் கரையில் பிரசித்திபெற்ற செல்வலிங்கேஸ்வரர் உடனமர் செல்வநாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. கார்த்திகை அமாவாசையான, நேற்று மதியம், 12:00 மணிக்கு, மூலவருக்கு பால், தயிர், எண்ணெய் மற்றும் பல்வேறு மூலிகை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சுற்று வட்டார பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதேபோல், மல்லசமுத்திரம் சோழீஸ்வரர் கோவில், வையப்பமலை சுப்ரமணிய சுவாமி கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ