உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

நாமக்கல்: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளில் பள்ளி மாணவர்களுக்கிடையே மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி, அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, நாமக்கல்லில் வட்டார அளவிலான மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டி நடந்தது. மாவட்டம் முழுதும், 15 ஒன்றியத்தில் உள்ள தலைமைப்பள்ளிகளில், கடந்த, 22ல் பள்ளி அளவிலான பேச்சுப்போட்டி நடந்தது.அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வட்டார அளவிலான பேச்சுப்போட்டி நடந்தது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, வரும், 30ல் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகளில் பங்கேற்பர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ