உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் மாநில அரசு மெத்தனம்: பா.ஜ., துணைத்தலைவர்

மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் மாநில அரசு மெத்தனம்: பா.ஜ., துணைத்தலைவர்

நாமக்கல்: ''மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில், தமிழக அரசு மெத்தனமாக உள்ளது,'' என, பா.ஜ., மாநில துணைத்த-லைவர் துரைசாமி குற்றம் சாட்டினார்.இதுகுறித்து, நாமக்கல்லில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:ஏர்போர்ட் விரிவாக்கம், ரயில்வே ஸ்டேஷன் விரிவாக்கம், தொழிற்போட்டை அமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கு, மத்திய அரசு ஒதுக்கிய நிதி, தமிழகத்தில் செலவிடாமல் உள்ளது. குறிப்-பாக, மத்திய அரசு திட்டங்களுக்கு, தமிழகத்தில் நில எடுப்பு பணிகள் மிகவும் மந்தமாக நடந்து வருகிறது. மத்திய அரசு அறி-விக்கும் திட்டங்களை நிறைவேற்றுவதில், தமிழக அரசு மெத்த-னப்போக்கை கடைப்பிடித்து வருகிறது. தமிழக அரசு, ஏற்கனவே மத்திய அரசிடம் இருந்து பெற்ற நிதி எவ்வளவு, எந்தெந்த திட்-டங்களுக்கு எவ்வளவு தொகை செலவு செய்யப்பட்டுள்ளது என்-பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.ராசிபுரம் நகரில் இருந்து, 12 கி.மீ., தொலைவில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க இடம் தேர்வு செய்துள்ளதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்காக, பா.ஜ., சார்பில் அருள் என்பவர், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்-துள்ளார். பொதுமக்களின் விருப்பப்படி ராசிபுரம் ஏ.டி.சி., டிப்போ அருகில் அல்லது, ஆண்டகளூர் கேட் அருகில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைத்தால், அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.கிழக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சரவணன், முன்னாள் தலைவர் சத்தியமூர்த்தி, நகர தலைவர் தினேஷ் உள்பட பலர் பங்-கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை